முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி மோசடி வழக்கு: தொழிலதிபர் விஜய் மல்யா வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு - தொழிலதிபர் விஜய் மல்யா மீது ரூ.950 கோடி மதிப்புள்ள, வங்கி மோசடி தொடர்பாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுபான தொழிலதிபரும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபருமாக விளங்கிய விஜய் மல்யா பல்வேறு வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் உள்ளார். அதில் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.950 கோடி கடனும் அடங்கும். மல்யா மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சிபிஐ, அவர் மீது வங்கி மோசடி வழக்கைபதிவு செய்துள்ளது.

மேலும், பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய நகரங்களிலுள்ள மல்யாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். விஜய் மல்யாவுக்கு விதிகளை மீறி கடன் அளித்ததற்காக, ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், கிங்பிஷர் நிறுவனத்திற்காக இந்த கடனை மல்யா வாங்கியிருந்ததால், அந்த நிறுவன இயக்குநரான ஏ.ரகுநாதன் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்