முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் சூட்டவேண்டும் - ரஜினிகாந்த் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நம்ம நடிகர்கள் எல்லாம் அனைவருமே ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி. நமக்குள்ள எப்போதுமே ஒற்றுமை இருக்கும், இருக்க வேண்டும். சமீபகாலத்தில் சில வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. அதற்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லை என யாரும் நினைக்க கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது, அதில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். எனக்கு இரண்டு வேண்டுகோள் இருக்கின்றன.

முதல் வேண்டுகோள் : யார் ஜெயித்து வந்தாலும் சரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்துவிட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை வைக்க வேண்டும். இரண்டாவது வேண்டுகோள்: ஆயிரம் முறை யோசித்து வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற முடியாமல் போனால் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும்.நல்ல எடுத்துக்காட்டாகவும் இருப்பீர்கள்.  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்