முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத அவமதிப்பு விவகாரம் பாகிஸ்தானில் கலவரம், மசூதி மீது தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: மத அவமதிப்பு விவகாரத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் ஜெக்லூம் நகரம் உள்ளது. இங்கு ராணுவ முகாம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அகமதியா பிரிவைச் சேர்ந்த நபர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்களை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. எனவே, அவர் மீது போலீசார் மத அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை தேடி வந்தனர். பாகிஸ்தானில் அகமதியா பிரிவினர் மைனாரிட்டி ஆக உள்ளனர்.

எனவே, மெஜாரிட்டியாக வாழும் பிரிவினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மத அவமதிப்பு செய்த நபரை கும்பலாக தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. இதனால் ஆத்தரம் அடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு செய்து அகமதியா பிரிவினரின் மசூதி மீது தாக்குதல் நடத்தினர். அதில் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையே அந்த நபர் அப்பகுதியில் உள்ள ஒரு கார்போர்டு அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில் பதுங்கி யிருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே அங்கு திரண்டு  சென்ற கும்பல் அந்த தொழிற்சாலையை சுற்று வளைத்து தாக்குதல் நடத்தியது. பின்னர் தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்தது. தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படை யினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையே மத அவமதிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்ததால் அங்கு அமைதி திரும்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்