முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர் நெய் அபிஸேக நேரம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. கோவில் நடைதிறந்த முதல் நாளில் இருந்து அய்யப்பன் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  சபரிமலையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மழையையும் பொருப்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருவதால் சில நாட்கள் இடைவேலைக்கு பிறகு நேற்று முன் தினமும் முதல் சபரிமலையில் மழை கொட்டிவருகிறது. கொட்டு மழையிலும் சரணகோஶம் முலங்க இருமுடி கட்டிய அய்யப்ப பக்தர்கள் சாரைசாரையாக சென்று சுவாமி அய்யப்பனை வழிப்பட்டனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 11 மணி வரை நடைபெறும் நெயாபிஸேகம் அரைமணி நேரம் நீட்டிக்க பட்டு 11.30 வரை நடைபெற்றது. தற்போது சபரிமலைக்கு பெண் பக்தர்கள் கூட்டமும் அதிகளவில் வருகிறது. 10வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வர தடையுள்ளதால், பெண் பக்தர்களை கண்காணிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் பக்தரை சோதனை செய்த போது அவர் 10 வயதுக்கு மேற்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பக்தர்கள் கூட்டம் காரணமாக நேற்று முன் தினம் கோவில் நடை இரவு 11க்கு பதில் 11.30 வரை நடை திறந்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்