முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன் கோட் விமானப்படை தளத்தை மோடி பார்வையிட்டார்

சனிக்கிழமை, 9 ஜனவரி 2016      இந்தியா
Image Unavailable

பதன்கோட்(பஞ்சாப்) - பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய  பதன் கோட் விமானப்படை தளத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன் கோட்டில் விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ம்தேதியன்று தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்கு தலில் ஈடுபட்ட 6தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்களை எதிர் கொண்டு பதிலடி தந்த இந்திய வீரர்களில் 7பேர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். 12வீரர்கள் காயம் அடைந்தார்கள்.

  தீவிரவாதிகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே 4நாள்  சண்டை நடை பெற்றது. தீவிரவாதிகளிடம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இருந்தன.  அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் . அவர்கள் மீது கடும் நடவடிக் கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான் இதற்கு உரிய பதில் அளிக்கும் பட்சத்திலேயே  இந்த மாதம் 15ம் தேதியன்று பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் பதன் கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களா என்பதை கண்டறிய பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . 

இந்த முக்கிய கூட்டத்தில் அந்த நாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை ஆலோசகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்தியா அளித்துள்ள விவரப்படி பாகிஸ்தானில் முகாமிட்டு இருக்கும் அந்த தீவிரவாதிகள் மீதும் நடவடிக் கை எடுக்கலாம் என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா குறிப்பிட்ட தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினார்களா என்பதை கண்டறிய முக்கிய ஆதாரங்களை எதிர் நோக்கி உள்ளோம். உண்மையான குற்றவாளிகளை நாங்கள் கடுமையாக தண்டிப்போம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தார்கள். பதன் கோட்டில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என்பதை கண்டறிய 3நாட்கள் தேடுதல்  வேட்டை நடைபெற்றது. இந்த தேடுதல் வேட்டை நேற்று முன்தினத்துடன் முடிந்தது.  பதன் கோட் விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லைக்கு 35கிலோ மீட்டர்தொலைவில் அமைந்திருக்கிறது.

இதனால் அந்த எல்லையில் இருந்து எளிதாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் விமானப்படை தளத்தில் 20 மணி நேரம் பதுங்கி பின்னர் தாக்குதலை நடத்தினார்கள்.  விமானப்படை தளத்தில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு என 3ஆயிரம் வீடுகள் உள்ளன. அதில் வீரர்களின் குடும்பங்கள் உள்ளன. ஒருபக்கம் இந்த வீடுகளை பாதுகாக்க வும், விமானப்படை தள கட்டிடங்களை பாதுகாக்கவும்  வீரர்கள்  முயல வேண்டி இருந்தது. அதே நேரத்தில்  தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தவும் வீரர்கள் நடவடிக் கை எடுத்தனர். பதன் கோட் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்று பார்வையிட்டார். முந்தைய சனிக்கிழயைன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை பிரதமர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் யாரும்  இல்லை என்பதை விமானப்படை அதிகாரிகள்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர், இந்தியவிமானப்படை கமாண்டோக்கள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தினார்கள். பதன் கோட் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த 5ம் தேதியன்று சென்று பார்வையிட்டார். இந்த தாக்குதல் நடந்த தகவல் வந்ததும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக் கை  எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago