Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!

வியாழக்கிழமை, 8 மே 2025      இந்தியா
Operation-Sindhoor-2

புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று முன்தினம்) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின. இந்நிலையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மற்றொரு நாட்டில் இருந்து தங்கள் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பயங்கரவாத உள்கட்டமைப்பை தாக்கிய இந்தியாவின் நடவடிக்கை நியாயமானது" என்று பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு எம்.பி. பிரீத்தி பட்டேல், "தங்கள் நாட்டை பாதுகாக்கவும், தங்களுக்கு அச்சுற்றுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை அழிக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து