முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு சவாலானது: வாட்சன்

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - டி-20  போட்டிகளில் விளையாடுவது என்பது ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சவாலானது என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வாட்சன் கூறிஉள்ளார்.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக அறியப்பட்டு வரும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர்  ஷேன் வாட்சன், டி-20 போட்டிகளில் விளையாடுவது என்பது எங்களுக்கு சவாலானது, குறுகியநேரத்தில் விளையாடப்படும் போட்டியானது பொழுதுபோக்கு மதிப்புடையது என்று உணர்வதாக கூறிஉள்ளார். ரேங்கிங் அல்லது சுற்றிலும் பெரிய அளவிலான விஷயங்கள் எதுவும் கிடையாது மற்றும் முற்றிலும் பொழுதுபோக்கு மதிப்புடையது, குறிப்பிட்டு கூறினால் இது அதிகமான பொழுதுபோக்கைதான் கொடுக்கிறது.

உலககோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறஉள்ள நிலையில், சரியான வீரர்களின் சேர்க்கையை பெறுவது என்பது மிகப்பெரிய பணியாகும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். வெவ்வேறு கிரிக்கெட் வீரர்களின் பணியினை அறிவது மற்றும் அவர்கள் எப்படி பொருத்தமாக இருப்பார்களா என்பதை கண்டுபிடித்து, அவர்களை தயார் செய்வது என்பது மிகவும் சவாலானது, நாங்கள் சீரற்ற நிலையில் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பூமராங்கால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் வாட்சன் குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய போது நம்பமுடியாத நிலையில் அவரது பணியானது இருந்தது என்ற வாட்சன், ஸ்டீவ் சுமித் - விராட் கோலி இடையே விரோதப்போக்கு இருப்பதாக கூறப்படுவதை நிராகரித்துவிட்டர்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டி-20 போட்டி இன்று மெல்போர்னில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்