முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் தாக்குதல் போன்று மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம்: ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பதன்கோட் தாக்குதலை போன்று மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தாய் இயக்கமான ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளான். கடந்த மாதம் 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் ஜெய்ஷ–இ–முகமது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 8 பேர் வீரமரணமடைந்தனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளது. ஆனால் இதுவரை எந்தஒரு விசாரணையையும் பாக். எடுக்கவில்லை. இந்த நிலையில் பதன்கோட் பாணியில் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என்று தடை செய்யப்பட்ட ஜமாத்–உத்–தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த பிரமாண்ட பேரணியில் இது தொடர்பாக அவன் பேசியதாவது:–

காஷ்மீரில் 8 லட்சம் இந்திய படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களால் பதன்கோட் தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியவில்லை. பதன்கோட் பாணியில் மேலும் தாக்குதல் நடத்துவோம். காஷ்மீர் விடுதலைக்கு இன்னும் இரத்தம் சிந்தப்படும் என்று கூறிஉள்ளான். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காஷ்மீர் விடுதலை பெறும் வரை எங்களது போர் தொடரும். நாங்கள் புனித போருக்கு தயாராகி விட்டோம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தாய் இயக்கமான ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத். ஜமாத் உத் தாவா இயக்கம் தீவிரவாத இயக்கம் என ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (ரூ.65 கோடி) விலையும் வைத்துள்ளது. ஆனால் அவன் பாகிஸ்தானில் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றான்.  2008–ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கேட்டும் பாகிஸ்தான் இதுவரை ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்