முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மிருதி இரானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அச்சறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா கடந்த மாதம் தற்கொலை செய்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாணவர் தற்கொலைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்களிலும் ஸ்மிருதி இரானிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஸ்மிருதி இரானிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. மாணவர்கள் அவர் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய காபினெட் அமைச்சர் என்ற முறையில் தற்போது அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இனி அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டால் 20 கமாண்டோ வீரர்கள் அவருக்கு பாதுகாப்புக்கு அளிப்பார்கள். தற்போது மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின்கட்காரி, கிரன்ரிஜூ, ஜிதேந்திரசிங், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல் ஆகியோருக்கு ''இசட்'' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்