முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை : பாகிஸ்தான் ராணுவ தலைவர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : 12 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் ரகீல்  ஷெரீப் உறுதிபடுத்தினார். ராணுவ நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை அறிவித்த சில நாட்களுக்கு பின்னர் இந்த தகவலை ராணுவ தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் பல்வேறு தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தானில் மேற் கொண்டுள்ளனர். அவர்கள் பன்னு சிறை உடைப்பு, ராணுவ படைகளின் மீது தாக்குதல், சட்ட அமலாக்கம் முகமைகளின் மீது தாக்\குதல் , பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற பயங்கரச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியன்று பெஷவார் பள்ளியில்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 150 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில்  பெரும்பாலானவர்கள் பள்ளி சிறுவர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்தது. இந்த நடந்த இடம் பாதுகாப்பு காரணமாக மிக ரகசியமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

பெஷாவர் பள்ளி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த தீவிரவாதிகளுக்கும்ராணுவ நீதிமன்றத்தால்  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்