முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள் அணியில் இருந்து சுனில் நரின், பொல்லார்டு விலகல்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன் - டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த சுனில் நரின் பந்துவீச்சு சரியில்லாத காரணத்தினாலும், பொல்லார்டு காயம் காரணமாகவும் விலகியுள்ளனர். 6-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்து இருந்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின், ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் ஆகியோர் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

இந்த தகவலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பந்து வீச்சு சர்ச்சையில் தடையை சந்தித்த சுனில் நரின் தனது பந்து வீச்சை முழுமையாக சரி செய்யாததாலும், பொல்லார்ட் முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததாலும் விலகல் முடிவை எடுத்துள்ளனர். பொல்லார்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வைதே அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுனில் நரைனுக்கு பதிலாக இடம் பெறும் வீரர் பெயரை இன்னும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், குரூப்-1ல் வெஸ்ட் இண்டீஸ் அணி இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்