முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸ் தாக்குதல் குற்றவாளியை பிரான்சிடம் ஒப்படைத்தது பெல்ஜியம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

பாரீஸ்  - பாரீஸ் தாக்குதல் குற்றவாளியை பிரான்சிடம் ஒப்படைத்தது பெல்ஜியம் அரசு. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்சு தலைநகர் பாரீஸில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில்,  இந்த தாக்குதலுக்கு முக்கிய சதிகாரனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெல்ஜியத்தை சேர்ந்த சலா அப்தேஸ்லம் என்ற நபர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி  பெல்ஜியம் போலீசரால் கைது செய்யப்பட்டான்.

பிரான்சு குடிமகனான அப்தேஸ்லம் அந்நாட்டில் உள்ள மோராக்கன் வம்சாவளியை சேர்ந்தவன் ஆவான். பெல்ஜியத்தில் வசித்து வந்த இவன், பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் உயிருடன் இருக்கும் ஒரே தீவிரவாதி ஆவான். இந்த நிலையில் விசாரணைக்காக பெல்ஜியம் அதிகாரிகள் பிரான்சிடம் அப்தேஸ்லமை ஒப்படைத்தனர். ஹெலிகாப்டர் மூலமாக பிரான்சு அழைத்து வரப்பட்ட அப்தேஸ்லாமை, பிரான்சு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அப்தேஸ்லம் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்