முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினமும் 18 மணி நேரம் உழைக்கிறேன்: சந்திரபாபு நாயுடு சொல்கிறார்

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

நகரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நடந்த மே தின விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் கிடைக்கும் வகையில் தனது பெயரில் “சந்தரண்ணா பீமா” இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தில் 1 ½ கோடி தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் ஆகஸ்டு 15-ந்தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

நான் தினமும் 18 மணி நேரம் உழைக்கிறேன். மாநிலத்தின் முதல் தொழிலாளி நான்தான். விவசாய கூலித்தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கும், சிறு தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 ½ கோடி பேர் பயன் அடைவார்கள்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்