முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரெயில்கள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - கோடை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தெற்கு ரெயில்வே சுவிதா சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– 1. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு (எண். 10063) சுவிதா சிறப்பு ரெயில் 20–ம் தேதி இரவு 7.05 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

2. வருகிற 22 மற்றும் 29–ந்தேதி மதியம் 2.45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு (எண். 00602) சுவிதா சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது.

3. எழும்பூரில் இருந்து 27–ந்தேதி இரவு 7.05 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் திருநெல்வேலிக்கு புறப்பட்டு செல்கிறது. எண். 06003 கொண்ட இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

4. சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு (எண். 06005) சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண ரெயில் 20 மற்றும் 27–ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுண் நிலையங்களில் நின்று செல்லும்.

5. எர்ணாகுளத்தில் இருந்து சென்ட்ரலுக்கு சுவிதா சூப்பர் பாஸ்ட் ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்ட்ரல் வந்து சேருகிறது.

6. கொச்சுவேலியில் இருந்து மங்களூருக்கு (எண். 06014) என்ற சிறப்பு கட்டண ரெயில் 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மங்களூருக்கு மறுநாள் அதிகாலை 1 மணிக்கு செல்கிறது. மங்களூரில் இருந்து 22, 29–ந்தேதிகளில் மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 5 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது.  கொச்சுவேலியில் இருந்து கவுகாத்திக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. 22 மற்றும் 29–ந்தேதி (ஞாயிறு) பகல் 12 மணிக்கு கொச்சுவேலியில் புறப்பட்டு புதன்கிழமை காலை 8.15 மணிக்கு கவுகாத்தி செல் கிறது. இந்த ரெயில் பெரம்பூர், கூடூர் வழியாக செல்கிறது.  இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்