முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டு நிறைவு விழா : விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.1000 கோடி செலவு : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 26 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மோடி தலைமையிலான பா.ஜ. அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக ரூ.1000 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே 26-ந்தேதி  மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார். 

நேற்று பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று மூன்றாவது ஆண்டு தொடங்கவுள்ளது. இதையொட்டி அரசின் சாதனைகளை விளக்கி டெல்லியில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இது தவிர பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஊடகங்கள் மூலம் மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது. இதுபற்றி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில்,

‘இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த ஒரு நிகழ்ச்சி தொடர்பான விளம்பரத்திற்காக மோடி அரசாங்கம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், டெல்லி மாநில அரசாங்கம் முழு ஆண்டிற்கும் ரூ.150 கோடிக்கும் குறைவாகவே செலவு செய்துள்ளது’ என்றார். ஆம் ஆத்மி அரசாங்கம் பெரிய விளம்பரத்திற்கு அதிக தொகை செலவு செய்வதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், கெஜ்ரிவால் தற்போது பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்