முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயாவில் பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி

சனிக்கிழமை, 28 மே 2016      இந்தியா
Image Unavailable

ஷில்லாங்  - மேகாலயாவில் உள்ள ஹாஜி பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு இசைக்கருவிகளை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மேகாலயாவில் உள்ள ஹாஜி பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை இயக்கினார். வடமாநிலங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகின்றார். 

இதன் ஒரு பகுதியாக, மேகாலயா சென்ற பிரதமர், புதிய ரயில் சேவையை மக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அங்குள்ள எழில் சூழ்ந்த மாவ்லாங் பகுதிக்கு சென்ற பிரதமரை, ஹாஜி பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு இசை கருவிகளை இயக்கி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். பின்னர், பழங்குடியின மக்கள் வேலைசெய்யும் பட்டறைக்கு சென்று, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்