முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீராங்கனை அன்ஜூ ஜார்ஜ்-பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த்துக்கு புதியபதவி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : கேரளாவில் விளையாட்டுத்துறை அமைச்சரால் விமர்சிக்கப்பட்டு அந்த மாநில விளையாட்டுகவுன்சிலில் இருந்து பதவி விலகிய தடகள வீரங்கனை அன்ஜூ ஜார்ஜ் , தேசியபாட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் கோபி சந்த் இந்தியாவின் விளையாட்டு மேம்பாடு திட்ட அமைப்பான  கெலோ இந்தியாவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் விளையாட்டுக்கவுன்சில் தலைவராக இருந்தவர் அன்ஜூ ஜார்ஜ். அவர் தற்போது பெங்களூரில் இருந்து வருகிறார். அவர் கேரள விளையாட்டுக்கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ள பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வருவதற்கு கேரளாவின் முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸ் கூட்டணி அரசு விமான டிக்கெட் கட்டணத்தை அளித்தது.

இந்த நிலையில் கேரளாவில் இடது சாரிகள் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். அவரது அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள  ஜெயராஜன் விளையாட்டு வீராங்கனை அன்ஜூ ஜார்ஜை சந்திக்கும் போது அவருக்கு விமான டிக்கெட் கட்டண சலுகைகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளன. அவர் விளையாட்டுக்கவுன்சில் தலைமை பொறுப்பு வகித்தபோது, இடமாறுதல்கள், நியமனங்கள் முறைகேடாக நடந்தன என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் தன்னை விமர்சித்தது தொடர்பாக அன்ஜூ முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார். இந்த நிலையில் அன்ஜூ ஜார்ஜ் கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.

கேரள விளையாட்டுக்கவுன்சில் பதவியில் இருந்து பதவி விலகிய அன்ஜூவுக்கு தற்போது இந்தியாவின் கெலோ இந்தியா திட்டத்தில் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கெலோ இந்தியா என்பது இந்திய விளையாட்டை மேம்படுத்தும் திட்டமாகும். இந்ததிட்ட கமிட்டியில் 7 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தற்போது அன்ஜூ ஜார்ஜ் மற்றும் கோபி சந்த்துக்கு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கெலோ இந்தியா திட்ட கமிட்டியின் தலைவராக விளையாட்டுத்துறை செயலாளர் ராஜீவ் யாதவ் உள்ளார்.

அன்ஜூ நீளம் தாண்டுதலில் உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். அவர் உலக தடகள போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

கெலோ இந்தியாவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கோபி சந்த் முன்னாள் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் ஆவார். அவர் இந்திய பாட்மிண்டன் தேசிய தலைமை பயிற்சியாளராக 2006ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியில் உருவான சாதனை வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சாந்து, கே.ஶ்ரீகாந்த் ஆகியோர் தற்போது சர்வதேச போட்டிகளில்  வென்று வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்