முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே புதிய கட்டுப்பாடு

புதன்கிழமை, 13 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா  - அணியின் பேருந்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு 50 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் அனில் கும்ளே புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளார். வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் சென்றுள்ளது. இந்தியா-மே.இ.தீவுகள்அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 21-ம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’ ஆனது. 3 நாட்கள் நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டம் 14-ந்தேதி(நாளை) தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அணியின் பேருந்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு 50 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அணி வீரர்களுக்கு அவர் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.வீரர்களிடம் கும்ப்ளே கூறியுள்ளதாவது.,

வீரர்கள் ஒழுங்கை கடை பிடிக்க வேண்டும். வீரர்கள் எப்பொழுது விரும்பினாலும் கலந்து பேச நான் தயாராக இருக்கிறேன். வேலை, ஒழுக்கம், நகைச்சுவை, ஓய்வு எல்லாம் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் நடைபெற உள்ள மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்தில் உதவி பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மசாஜ் செய்வதற்கு வீரர்கள் விரும்பியபடி நேரத்தை செலவிட முடியாது. மசாஜ் செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் அந்த பணியாளர்களை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்