முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் : பாதிக்கப்பட்டோரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ராஜ்கோட்  - கடந்த ஜூலை 11-ம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த 4 இளைஞர்களையும் நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கியதோடு, அதனை வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை  புயலை கிளப்பியது. 

இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உனா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இவரைத் தொடர்ந்து நேற்று ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான கெஜ்ரிவாலும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ராஜ்கோட்டில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு சென்ற கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசினார். இந்த தாக்குதல் சம்பவத்தால் வெடித்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் கெஜ்ரிவால் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், உனா தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் அரசுக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. குஜராத் மாநில அரசு தலித்களுக்கு எதிரானது. மாநிலத்தில் தலித்களை ஒடுக்க அரசு முயற்சிக்கிறது.  இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்