முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 6 ஆயிரம் வங்கிகள் பங்கேற்கின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்தும், தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இருந்த போதிலும் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் 5 துணை வங்கிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட் வங்கி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தற்காலிக தடை விதித்தது. இதனால் வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தற்காலிமாக ஒத்திவைத்தனர்.  இந்த நிலையில் வங்கிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, திட்டமிட்டபடி வருகிற 29-ம் தேதி (நாளை) நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அளித்த பேட்டியில் கூறியதாவது., மத்திய அரசுடனான, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் திட்டமிட்டபடி 29-ம் தேதி (நாளை வெள்ளிக்கிழமை) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதில் நாடு முழுதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் இந்தியா முழுவதும், 80,000 வங்கிகள், தமிழகத்தில் 6,000 வங்கிகள் இயங்காது என்றார். வங்கி  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் காசோலை பரிமாற்றம் மற்றும் டி.டி. எடுத்தல் உள்ளிட்ட வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்