முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமை பண்ணை திட்டத்திற்கு வரவேற்பு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தமிழக அரசு தொடங்கிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது வரை 17 ஆயிரத்து 293 டன் காய்கறிகளை விற்பனை செய்து இக்கடைகள் சாதனை படைத்துள்ளன.

2013 ம் ஆண்டு மாநிலம் முழுவதும் வறட்சி நிலவியது. தென்மேற்கு பருவ மழையும், வட கிழக்கு பருவ மழையும் போதுமான அளவில் பொழியாததால் காய்கறிகள் சாகுபடி அளவு குறைந்தது. இந்த நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் காய்கறிகள் இறங்கிய போதும் அதன் விலை கடுமையாக இருந்தன. உள்ளூர் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிய இடைத்தரகர்கள் கூட அதையும் அமோக லாபத்துக்கு விற்றனர்.எப்போதும் விலை குறைவாகக் கிடைக்கக்கூடிய முள்ளங்கி கூட கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்றது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.120 வரை விற்றது. கேரட், பீன்ஸ் வகைகளை கனவில் கூட சமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.இதனால் காய்கறிகளை வாங்கும் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், விளைவிக்கும் விவசாயிகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில்தான் வெளிச்சந்தையில் காய் கறி விலையினை கட்டுப்படுத்தி சாதாரண பொது மக்களை காய்கறி விலை உயர்விலிருந்து காப்பாற்ற வேண்டும்.அதே சமயம் காய்கறிகளை விளைவிக்கும் உழவர்களுக்கும் இடைத்தரகர்கள் இல்லாமல் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதல்வர் ஜெயலலிதா குறைந்த விலையில் தரமான காய்கறிகளை வழங்கிடும் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தை 20.06.2013 அன்று தொடங்கினார்.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில் சென்னை மாநகரில் 2 நடமாடும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 42 கடைகள் தொடங்கப்பட்டன. கோவை உட்பட 11 மாநகர மண்டலங்களில் 28 கடைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடை பெற்று வருகின்றன. இக்கடை களுக்கான காய்கறிகள் அனைத்தும் இவை அதிகம் விளையும் திண்டுக்கல், நீலகிரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து 32 வகையான காய்கறிகளை கூட்டுறவு விற்பனைச்சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசு வாங்குகிறது.இதனால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். அது மட்டுமல்லமல் அரசு ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் சந்தைக்கு தங்கள் விளை பொருள்களை அவர்கள் கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூடாபுரத்தை சேர்ந்த முனியஅப்பா கூறுகையில் நான் பயிரிட்டு வரும் கேரட் முழுவதையும் அரசே நல்ல விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்கிறது.இதனால் எனக்கு நியாயமான விலை கிடைக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தூத்துக்குடி பண்ணை பசுமை கடையில் தொடர்ந்து காய்கறி வங்கி வரும் விஜயலஷ்மி கூறுகையில் காய்கறிகளை நானே எடுத்து எடை போட்டுக்கொள்ள இங்கு அனுமதி உண்டு என்பதால் துல்லியமான எடையில், குறைவான விலையில் பச்சை பசேலென்று காய்கறிகளை வங்கிக்கொள்வதாகவும், இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்