முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறைக்கு ரூ.209 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு 209 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும் என்று ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து ஆர்.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், 15 தலைப்புகளின் கீழ் 71 அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு 209 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

நாட்டின் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளிலும், மக்களின் பாதுகாப்பிலும், சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் மானியக் கோரிக்கையின் அறிவிப்புகளில் காவல் துறையின் இடர்படி 2 மடங்காக உயர்த்தப்படும் என்றும், காவலர்களுக்கு குண்டு துளைக்காத 100 கவசங்கள் வழங்கப்படும் என்றும், 100 காவல் நிலையங்களில் 3 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், தீயணைப்புத் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 10 கோடியே 26 லட்சம் செலவிடப்படும் என்றும், அத்துறைக்கான மேம்பாட்டுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்