முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் தொடரும் நில அதிர்வுகள்: பலி எண்ணிக்கை 267 ஆக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

அமட்ரைஸ்   - இத்தாலியில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.இதனால் அங்கு மக்கள் பெரும் அச்சத்தில் பரிதவித்து உள்ளார்கள். இந்த நிலையில் அங்கு  நில நடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கடந்த புதன் கிழமையன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகள் நொறுங்கின. இதில், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கடந்த 3 நாட்களாக தீயணைப்பு படையினர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றும் ஆப்டர் ஷாக் என கூறப்படும் பயங்கர நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்று மீட்புக்குழுவினர் தெரிவித்தார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அபேனின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு பின்னர் இதுவரை ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. நில நடுக்கத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து 215 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புக்குழுவினரின் செயலுக்கு இத்தாலி பிரதமர் மாட்டோ ரென்சி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்