முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பத்தூர் : பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டம், பிள்ளை யார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர் கள் தரிசனத்துக்கு வருவார்கள். சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அங்குசத் தேவருக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு உற்சவ விநாயகர் வீதி உலா தினமும் நடைபெறும். 2-ம் நாள் திருவிழா முதல் 8-ம் நாள் திருவிழா வரை தினமும் காலை வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெறும்.

செப்.1-ம் தேதி மாலை 6 மணியளவில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாளன்று மயில் வாகனத்திலும், 8-ம் நாள் குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெறும். 9-ம் நாளான செப்.4-ம் தேதி மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

10-ம் திருநாளான செப்.5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணி அளவில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரியும், பகல் 12 மணி அள வில் மூலவருக்கு ராட்சத கொழுக் கட்டை படையலும், சிறப்பு அலங் கார தீபாராதனையும் நடைபெறும். இரவு 11 மணி அளவில் ஐம்பெரும் மூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்