முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பார்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - உலக வங்கியின் தலைவர் பதவிக்காக யாரும் போட்டியிட முன்வராததால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜிம் யோங் கிம் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது, உலக வங்கியின் தலைவராக இருக்கிறார் ஜிம் யோங் கிம். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.  இந் நிலையில், காலியாகவுள்ள அப்பதவிக்காக யாரும் போட்டியிட முன்வரவில்லை.

இதனையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜிம் யோங் கிம் தலைவராக நீடிப்பார் என்று உலக வங்கி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.  இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

''அமெரிக்க குடிமகனான ஜிம், வங்கியின் நிர்வாக இயக்குநர்களால் உலக வங்கியின் அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஜூலை 1, 2017-ல் தொடங்குகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.  உலக வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்