முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரை 3-0 ஆட்ட கணக்கில் இந்தியா கைப்பற்றியது

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் :  நியூசிலாந்துடன் மோதிய 3வது இறுதி டெஸ்ட்டிலும் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. அந்த அணி  321 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியா 3-0 ஆட்ட கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே  3 டெஸ்ட் கொண்ட தொடர் நடந்தது. இந்த தொடரில்  அனைத்து டெஸ்ட்டுகளிலும் இந்தியா மகத்தான வெற்றி பெற்று 3-0 ஆட்ட கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்தூரில் இந்த இரு அணிகள் இடையே 3வது இறுதி டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 475 ரன் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில்  153 ரன்னுக்கு சுருண்டது. இதனால் இந்தியா  321 ரன் வித்தியாசத்தில் வென்றது. 4வது நாள் ஆட்டத்துட ன் இந்தூர் டெஸ்ட் முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி உள்ள நிலையில் இந்தியா தனது சாதனை வெற்றியை  பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் அந்த அணியின் பேட்ஸ்மென்களை இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். அவர் 59ரன்னுக்கு 7 வி க் கெட்டுகளை சரித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில்  21வது முறையாக அவர்  ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்வீழ்த்திய சாதனையை செய்துள்ளார். அவர் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

முதல் இன்னிங்சில் இந்தியா  5விக்கெட் இழப்புக்கு 557 ரன் குவித்தது.  இரண்டாவது இன்னிங்சில்  அந்த அணி  49 ஓவரில்  3விக் கெட் இழப்புக்கு  21 6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா  அவுட் ஆகாமல் 101 ரன் குவித்தார். அவருக்கு டெஸ்ட் போட்டியில் இது 8வது சதமாகும். கவுதம் காம்பீர் 50 ரன் அடித்தார். நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஜிதேன் படேல்  56 ரன்னுக்கு  2 விக் கெட்டுகளை எடுத்தார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில்  299ரன் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில்  44.5 ஓவரில்  153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ராஸ் டைலர்  32 ரன்  எடுத்தார். இந்திய பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்  59 ரன்னுக்கு  7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இந்த இந்தூர் 3வது இறுதி டெஸ்ட்டில்  மொத்தம் 13 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்திய அணியின் வெற்றியை இந்திய பயிற்சியாளர் கும்ளே மற்றும் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இந்திய சுழல் பந்து  வீச்சாளர்களின்  சுழலை எதிர் கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.  இந்த இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்