முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

கன்னியாகுமரி  - தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், புத்திரி, வடிவீஸ்வரம், தேரேகால்புதூர், வடக்கு தாமரைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் நீச்சல் மற்றும் மரம் ஏற தெரிந்த தலா 10 இளைஞர்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மழை மற்றும் வெள்ளகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், வடகிழக்கு பருவமழை காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது என்பது குறித்து, நாகை மாவட்டம் சீர்காழியில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சந்திரபாடி முதல் கொடியம்பாளையம் வரை உள்ள 27 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மீனவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்