முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பு கொடூரமான தாக்குதல்: 80-க்கும் அதிகமானோர் பலி

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத், ஈராக்கின் ஹில்லா நகரில் நடத்தப்பட்ட பயங்கர தற்கொலைத் தாக்குதலில் 80 பேர்களுக்கும் மேல் பலியாகியுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது. பாக்தாத்திற்கு 100 கி.மீ தெற்கே ஹில்லா நகரில் பெட்ரோல் நிலையத்தில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரி ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதில் பெரும்பாலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர்.

ஈராக் புனிதநகரான கெர்பலாவில் 40 -வது துக்க தினத்தை அனுஷ்டிக்க ஷியா யாத்திரிகர்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்தி விட்டு உணவு விடுதிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்குப் பிடித்தமான உணவுவிடுதி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் நிலையத்தை வெடிபொருட்கள் நிரம்பிய லாரியைக் கொண்டு தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் யாத்திரிகர்கள் வந்த 5 பேருந்துகளும் எரிந்து சாம்பலாயின.

அமெரிக்க ஆதரவுடன் ஐ.எஸ் தீவிரவாதத்தை எதிர்த்து ஈராக்கிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் விதமாகவும், ஷியா பிரிவினர் மேல் உள்ள வன்மத்தினாலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்