மாரடைப்பின் வகைகளும் நவீன சிகிச்சை முறைகளும்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016      மருத்துவ பூமி
medigal

மாரடைப்பை இன்று ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தில் இரத்தம் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப்படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

மாரடைப்பின் வகைகள்:

முதல் வகை: முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது. இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர். இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வகை: இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது. இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும். ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை: நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை: மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும். இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம்.

ஐந்தாவது வகை

ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டென்ட். இது உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பைக் கொண்டது. ரத்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இதயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் ‘இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

‘இதயத் திசுக்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மாரடைப்பு வருகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவது, ரத்தம் உறைவது உள்ளிட்ட காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில், 1977-ல் பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி முறை வந்தது. இந்த சிகிச்சையின்போது, தொடையில் உள்ள ரத்த நாளத்தில் சிறிய துளையிட்டு அதன் வழியே கம்பி போன்ற கருவி ஒன்றை அனுப்பி, அடைப்பு உள்ள இடத்தில் பலூன் போன்ற அமைப்பு ஒன்றை வீங்கச் செய்து அடைப்பு சரிசெய்யப்பட்டது.

1988-ம் ஆண்டில், இதயத் திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை உள்ளே செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை பலூன் துணையுடன் விரிவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. வலை அமைப்பு விரிவாக்கப்பட்டதும் பலூன் சிறிதாக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுவிடும். இதனால், ரத்தம் செல்வதில் இருந்த தடை சரிசெய்யப்படும். இந்த உலோகத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இதன் அடுத்தக் கட்டமாக, 2002ம் ஆண்டில், மருந்து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது தற்போது முதன்முறையாக உலோக ஸ்டென்ட்டுக்கு மாற்றாக, இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும் ஸ்கேஃபோல்டு என்கிற புதிய ஸ்டென்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக உலோக ஸ்டென்ட் என்பது கூண்டு போன்ற நிரந்தர அமைப்பு. நம்முடைய இதயத்தில் அது எப்போதும் இருக்கும். இந்த ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்தம் கட்டியாவதைத் தடுக்க, பல ஆண்டுகளுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். புதிய கரையக்கூடிய இதய ஸ்டென்ட் தற்காலிகமானது. ரத்தக் குழாய் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில்தான் இது இருக்கும். இதன் பிறகு 12 முதல் 24 மாதங்களில் இந்த ஸ்டென்ட் இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும். இதனால், இந்த புதிய ஸ்டென்ட் பயன்படுத்துவதன் மூலம் 6 மாதங்களிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துவிடலாம்.

ரத்தக் குழாயானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. அப்படி சுருங்கி விரியும்போதுதான் அது ஆரோக்கியமாக இருக்கும். பழைய ஸ்டென்ட் நிரந்தர அமைப்பு என்பதால், ரத்தக் குழாயின் தன்மை பாதிக்கப்பட்டது. ஆனால், புதிய ஸ்டென்ட் ரத்தக் குழாயின் இயற்கையானத் தன்மையைப் பாதுகாக்கிறது. மேலும், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்பது இந்த ஸ்டென்ட்டின் மற்றொரு சிறப்பம்சம்”

ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகதெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை, கொழுப்பு படிந்துள்ள நிலையின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை: பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது. பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தனி மனித ஒழுக்கம், மது, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்க நெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்:

மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும் அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம். வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர். திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும். புழுக்கம் தெரியும். உடலில் வியர்வை பெருக்கெடுக்கும். அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.

தவிர்க்கும் முறைகள்

* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
*  உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
*  சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*  கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.
*  டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போய்விடும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது. கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும். ஒருவருக்கு குருதிக் குழாய் அடைப்பு காரணமாக தலை சுற்றல், நினைவிழப்பு ஆகியவை ஏற்படும் நிலையில், உறவினர்கள் காலதாமதம் ஏதுமின்றி 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்தால் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது புதிய சிகிச்சை அளித்து நோயாளிக்கு பக்கவாதம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: