முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவம் வருகையை எதிர்த்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீர் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,  ராணுவம் வருகையை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தலைமைச்செயலகத்தில் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார்.

எதிர்ப்பு

 மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். அவர் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 19 இடங்களில் ராணுவத்தினர்  குவிந்தனர். அவர்கள்  கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி பாலத்தில்  செல்லும் வாகனங்களை கண்காணித்தார்கள்.இதுகுறித்து பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டார்கள். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

தகவல் இல்லை

இந்த பாலம் அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவது குறித்து ,மாநில அரசுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சுங்கச்சாவடிகள் மாநில தலைமைச்செயலகத்திற்கு 500 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இங்கு திடீர்  என ராணுவம் குவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 உடனே அவர் ஆவேசம் அடைந்தார். அவர் நிருபர்களை அழைத்து மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,  மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள் எமர்ஜென்சி நிலையை விட மோசமானதாக உள்ளது. ராணுவத்தினர் வருவது குறித்து மாநில அரசிடம் எந்த வித அனுமதியும் பெறவில்லை. இது ஜன நாயகத்தினை கேலி கூத்தாக்கும் செயல். ராணுவம் வாபஸ் ஆகும் வரை நான் தலைமைச்செயலகத்தை விட்டு வெளியேற மாட்டேன்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் அவர் விடிய விடிய தலைமைச்செயலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதி காலையில் மீண்டும் நிருபர்களை சந்தித்த மம்தா பானர்ஜி மாநில தலைமைச்செயலாளர்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்