முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இலவச தரிசனத்துக்கு 6 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 4 மணிநேரமும் ஆனது.

பக்தர்கள் கூட்டம் குறைந்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக மொத்தம் 13 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். நேற்று முன்தினம் காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 43 ஆயிரத்து 133 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ரூ2.5 கோடி காணிக்கை
இலவச தரிசனத்துக்கு 6 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 4 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 57 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. திருப்பதியில் குளிர் வாட்டி வதைப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்