முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரங்களை பெற தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், செவித்திறன்குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லா தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும். தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். தையல் பயிற்சி பெற்றுள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் கோரும் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் முழு முகவரி மற்றும் தொடர்புக்கு தொலைபேசி எண்ணுடன் எழுதி தங்களது மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையின் நகல், தையல் பயிற்சி பெற்றமைக்கான சான்று நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பத்தினை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ழுளுகூ ரோடு ( கோர்ட் அருகில்), செங்கல்பட்டு, காஞ்சிபுரம்-603 002. என்ற முகவரிக்கு தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகள் அனுப்பிவைக்குமாறும், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago