அரசு கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது : இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      உலகம்
Sirisena 2017 1 7

கொழும்பு  - இலங்கை அரசு விரைவில் கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது என இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா கூறியுள்ளார்.

முயற்சி பலிக்காது
இலங்கை அதிபர் ராஜபக்சே இது குறித்து கூறியதாவது:-
"இந்த அரசு கவிழும் என சிலர் கனவு காண்கிறார்கள்.  ஆனால், 2020-க்கு முன்பாக இந்த அரசு கவிழ்க்கப்படாது.  தேர்தல் வழியாக மக்களால் மட்டுமே இந்த அரசு மாற்றப்படும். அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகள் அடைந்தவர்களே அரசைக் கவிழ்க்க ஆர்வமாகப் பார்த்திருப்பார்கள். நான் ஒன்றை அவர்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். மக்களது ஒப்புதல் இல்லாமல் எதற்கும் இங்கு இடமில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.

ரணில் சவால்
கடந்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,"நான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அதற்குள் அரசாங்கத்தைக் கவிழ்த்து காட்டுங்கள்" என்று ராஜ பக்சேவிற்கு சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்: