செங்கோட்டை அருகே 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி வெட்டி கொலை 5 பேருக்கு வலை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருநெல்வேலி

 

தென்காசி,

 

செங்கோட்டை அருகே லாரி ஏற்றி 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கற்குடியைச் சேர்ந்தவர் வடகாசி மகன் ஹரிகரன் (28). ஆட்டோ டிரைவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஹரிகரன் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து ஹரிகரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஹரிகரன் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து 5 பேரும் கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். தன் கண் முன்னே தனது கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்ட சுப்புலட்சுமி கதறி அழுதார்.

 

இச்சம்பவம் பற்றி புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி.விக்ரமன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 

இச்சம்பவம் பற்றி புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கற்குடியைச் சேர்ந்த திருமலைக்குமார், காளி, சங்கிலி, பாலகிரு~;ணன் ஆகியோருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வடகாசி மகன்கள் மகே~;, ஹரிகரன் ஆகியோருக்கும் குளத்தில் மீன்பாசி குத்தகை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 10.9.2015 அன்று மகே~;, முருகன், இசக்கி, அடிவெட்டி, ஆட்டோ டிரைவர் கருப்பசாமி உட்பட 6 பேர் ஆட்டோவில் சென்ற போது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டனர்.

 

இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கொலை செய்த சங்கிலி, காளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட செ~ன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக ஹரிகரன் உள்ளார். இவர் கோர்ட்டில் சாட்சி கூறாமல் இருப்பதற்காக அவரை வீடுபுகுந்து 5 பேர் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மகாலிங்கம் மகன்; மகே~;, சங்கிலி, பாலகிரு~;ணன், உதயகுமார், நவாஸ்கான் என தெரிய வந்தது. இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: