முகப்பு

திருநெல்வேலி

Image Unavailable

நெல்லையில் லாரி டிரைவர் வெட்டிப்படுகொலை- தம்பதி உள்பட 4 பேர் தப்பி ஓட்டம்

7.Aug 2017

 நெல்லையில் முன்விரோதத்தில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டர். கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் ...

Image Unavailable

பழைய குற்றாலத்தில் போலீஸ்காரரை தாக்கிய சுற்றுலாப் பயணிகள் 21 பேர் கைது

19.Jul 2017

பழைய குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை தாக்கியதாக விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 21 ...

sengottai medical camp 2017 07 19

செங்கோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

19.Jul 2017

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ...

snkl blood camp 2017 07 02

சங்கரன்கோவிலில் ரத்ததான முகாம்

2.Jul 2017

சங்கரன்கோவிலில் தேசிய  மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் இரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாம்சங்கரன்கோவில் அரசு ...

courtralam five falls 2017 07 02

குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

2.Jul 2017

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களை கட்டும் சீசன் குற்றாலத்தில் சீசன் ...

Image Unavailable

ஆக்ஸ்போர்டு பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

2.Jul 2017

தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாம் ...

Image Unavailable

பீடி தொழிலாளர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம்

25.Jun 2017

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ...

nellai sirupanamai nala kulu ipthar nonbu

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா

25.Jun 2017

நெல்லையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இப்தார் நோன்பு திறப்பு ...

Image Unavailable

தென்காசியில் ஆட்டோ டிரைவர் கொலை கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்: எஸ்பி. அருண்சக்திகுமார் உத்தரவு

19.Jun 2017

தென்காசியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  கடையநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தென்காசியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த ...

Image Unavailable

தென்காசியில் வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவர் உட்பட 7 பேருக்கு வலை

19.Jun 2017

தென்காசியில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உட்பட 7 பேரை தென்காசி மகளிர் போலீஸார் வலை வீசி தேடிவருகின்றனர். ...

Image Unavailable

குற்றாலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டினால் நடவடிக்கை : கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

18.Jun 2017

நெல்லை  மாவட்டம் குற்றாலத்தில் குற்றால சாரல் தொடங்கும் போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வது மற்றும் ...

Image Unavailable

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுக்கள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

18.Jun 2017

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீபவளி ரெயில் டிக்கெட்டுகள் 10 ...

Image Unavailable

ராஜபாளையம்-தென்காசி-காவல்கிணறு இடையே நான்குவழிச்சாலை அமைக்க நடவடிக்கை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தகவல்

16.Jun 2017

ராஜபாளையம்-தென்காசி-காவல்கிணறு இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தென்காசியில் ...

Image Unavailable

தென்காசியில் அம்மா ஆரோக்கிய திட்டம்: செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

15.Jun 2017

தென்காசியில் அம்மா ஆரோக்கிய திட்டத்தினை தென்காசி சட்மன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் துவக்கி வைத்தார்.தென்காசி மாவட்ட...

Image Unavailable

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

15.Jun 2017

குற்றாலத்தில் போலீஸ் உடையில் வலம் வந்து சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த போலீசார் செங்கோட்டை ...

Image Unavailable

தென்காசியில் பொற்கொல்லர் தொழில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா

15.Jun 2017

தென்காசி நகைத் தொழிலாளர் சங்கத்தில் மத்திய அரசின் திறன் இந்தியா அமைச்சகத்தின் பொற்கொல்லர் தொழில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் ...

snkl medical camp 2017 06 13

சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம்

13.Jun 2017

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ...

nellai tamilnadu ariviyal iyakkam program 2017 06 13

நெல்லையில் வருங்காலங்களில் இளைஞர்கள் கருத்தும் காட்சியும் நிகழ்ச்சி

13.Jun 2017

நெல்லையில் அறிவியல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் வருங்காலங்களில் இளைஞர்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ...

snkl function 2017 06 11

சங்கரன்கோவிலில் முப்பெரும் விழா

11.Jun 2017

சங்கரன்கோவிலில் சாரதிராம் அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் ...

Image Unavailable

குற்றாலத்தில் களைகட்டும் சீசன்: சாரல் மழையால் குளு குளு நிலைமை

11.Jun 2017

குற்றாலத்தில் சாரல் மழை தொடர்வதால் குளு குளு நிலைமை நீடித்து சீசன் களைகட்டி வருகின்றது.குற்றாலத்தில் சீசன் கடந்த மாதம் இறுதி ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.