முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு சக்கர வாகனத்தில் அதிக மைலேஜ் தர செய்ய வேண்டியவை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      மோட்டார் பூமி
Image Unavailable

Source: provided

இருசக்கர வாகனங்களில் அதிக மைலேஜ் பெறுவது எப்படி ? பைக்கில் அதிக மைலேஜ் பெறுவதற்க்கு உண்டான சில அடிப்படை காரணங்கள் என்ன ? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

சரியான தேர்வு : சிறப்பான மைலேஜ் பெறுவதறுக்கு முதல் தொடக்கமே சரியான பைக்கினை தேர்ந்தெடுப்பதுதான். 100 சிசி முதல் 110 சிசி தொடக்கநிலை பைக்குகள் சிறப்பான மைலேஜ் தரவல்லதாகும். அதிக மைலேஜ் பெற செய்யவேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன?

செய்ய வேண்டியவை : முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளின் பரிந்துரைத்த கி.மீட்டரில் இடைவெளியில் அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில் சர்வீஸ் செய்யுங்கள். மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது மைலேஜ் அதிகரிக்க மிகவும் அவசிமானதாகும். டயரின் காற்றுழுத்தம் சரியாக உள்ளதா என்பதனை வாரம் ஒரு முறை சோதியுங்கள். தயாரிப்பாளர் பரிந்துரைத்த தரமான எரிபொருளினை தேர்வு செய்யுங்கள். அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தால் வண்டியை அணைத்து விடுங்கள்.

செய்யக்கூடாதவை  : கைகளுக்குள் கிளட்சினை வைக்காதிர்கள். ஆனால் நெரிசல் மிகுந்த சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். திடீர் வேகம், அதிக வேகம், அவசரமான சடன் பிரேக் போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் மைலேஜ் அதிகரிக்க காரணமாக இருக்கும். குறைவான கியிரில் என்ஜினை அதிகநேரம் இயக்காதீர்கள். பிரேக் பெடலில் எந்தநேரமும் கால் வைப்பதனை தவிருங்கள். நெரிசல் மிகுந்த சாலையை தவிர மற்றவற்றில் தவிர்த்திடுங்கள்.

கூடுதல் சுமைகள் வாகனத்திற்க்கு கூடுதலான வேலை தரும் என்பதனால் அவசியமற்ற துனைகருவிகள் மற்றும் பொருட்களை தவிர்த்திடுங்கள். பைக் நிற்கும் பொழுது அடிக்கடி ரைஸ் பண்ணாதிங்க. தேய்மானம் அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள். என்ஜின் மற்றும் காற்று பில்டர் போன்ற பகுதிகளில் தேவையற்ற எந்தவொரு பொருட்களையும் வைக்காதீர்கள்.

என்ஜின் மேற்பகுதியை தூய்மையாக பராமரிப்பது மிகவும் அவசியமானதாக ஏர் கூல் என்ஜின் என்பதானால் காற்று மிக தாரளமாக என்ஜின் குளிர்விக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 23 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago