முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை,  ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளாந சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது. கடந்த ஜூன் 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,320-க்கு விற்பனையானது. 24 கேரட் தங்கத்தின் விலையும் நேற்று கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,726-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், நேற்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி 1 கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,440 குறைந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து