Idhayam Matrimony

திருச்சி மலைக்கோட்டை, திருவெறும்பூர், கல்கண்டார்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்:அமைச்சர், நடிகைகள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் திருச்சி மலைக்கோட்டை சருக்குபாறை, மேலகல்கண்டார்கோட்டை, திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.சருக்குபாறை பொதுக்கூட்டத்திற்கு பகுதி கழக செயலாளரும், அமராவது கூட்டுறவு பண்டக சாலை இயக்குனருமான அன்பழகன் தலைமை வகித்தார். பகுதி கழக பொருளாளர் வணக்கம் சோமு என்ற சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு மாணரணி செயலாளர் கார்த்திகேயன், சுதாகர், பகுதி அவைத்தலைவர் விஜயகுமார், வட்ட செயலாளர்கள் கதிர்வேல், கேபிள் முருகன், கே.பி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளருமான நடராஜன், தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகையுமான ஆர்த்தி, முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் தர்காகாஜா, டாக்டர் தமிழரசி, தொழிற்சங்க செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முகமதுஇக்பால், ஏர்போர்ட் விஜி, பகுதி செயலாளர்கள் பாஸ்கர் என்ற கோபால்ராஜ், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, வெல்லமண்டி பெருமாள், முன்னாள் துணைமேயர் ஆசிக்மீரா, மலைக்கோட்டை ஈஸ்வரன், ஆரோக்கிய சகாயராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் பொம்மாசி பாலமுத்து, ஸஹரிகிருஷ்ணன், சைவசாமிதேவர், மணி, முன்னாள் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஜெ.பி.மேனன், சந்துரு ஜோதிவாணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.கூட்ட முடிவில் வட்ட செயலாளர் ஜெகதீசன் அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக வேல்முருகன் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.மேலகல்கண்டார்கோட்டை வி.க திடலில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், என்.எஸ்.பி.ரவிசங்கர், பாலசுப்பிரமணியன், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன், கழக செய்திக்குழு தொடர்பு உறுப்பினரும் திரைப்பட நடிகையுமான சரஸ்வதி ஆகியோர்கள் சிறப்புரை யாற்றினார்கள்.இக்கூட்டத்தில் ஜோன்மில்டன்பாபு, ரவிச்சந்திரன், சுரேஷ், முகமது கோரி, முகமதுரபீக், கே.கே.சண்முகம், தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் பகுதி பிரதிநிதி மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார். இதேபோல திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பாஸ்கர் என்ற கோபால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தொழிற்சங்க செயலாளர் ஜெயபால், முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், வட்ட செயலாளர் ஆர்.பி.கணேசன், முன்னாள் துணைமேயர் ஆசிக்மீரா, அன்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்ட முடிவில் அமிர்தலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக ஹரிகிருஷ்ணன் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago