முகப்பு

திருச்சி

VDM 1

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோடை மழையில்லாததால் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து குறைவு

26.Jun 2017

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸட் முதல் பிப்ரவரி வரை உள்ள சீசன் காலங்களில் பிளம்மிங்கோ, ...

Trichy 2017 06 19

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 568 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

19.Jun 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (19.06.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 568 மனுக்கள் பெறப்பட்டது என ...

Trichy 2017 06 18

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் முதல் நிலை தேர்வு நடைபெறும் தேர்வு மையம் : மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, பார்வையிட்டு ஆய்வு

18.Jun 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் இன்று (18.06.2017) நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ...

Trichy 2017 06 15

திருச்சி பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில், பயின்று ஆரம்பகால கல்விக்காக செல்லும் குழந்தைகளுக்கு கல்வி சான்றிதழ்கள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

15.Jun 2017

திருச்சி பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் ...

Trichy 2017 06 11

திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் , நாகைமாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர்களுடன் செயலாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது

11.Jun 2017

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 072 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

8.Jun 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வரும் 2017-2018ஆம் கல்வி ஆண்டில் 1664 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 072 ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தின் புதிய மு.ராஜாமணி பொறுப்பேற்பு

4.Jun 2017

திருச்சி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மு.ராஜாமணி நேற்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ...

Trichy 2017 05 31

திருச்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணி : மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்

31.May 2017

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 440 மனுக்கள் பெறப்பட்டது : மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் தகவல்

29.May 2017

திருச்சி மாவட்டத்தில் நேற்று (29.05.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 440 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட வருவாய்...

Trichy 2017 05 26

திருச்சி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் : 1 அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது

26.May 2017

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம், ...

Trichy 2017 05 23

தமிழக அரசின் சார்பில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் எஸ்.வளர்மதி மாலை அணிவித்தனர்

23.May 2017

திருச்சிராப்பள்ளியில் நேற்று(23.05.2017) முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு 1342-வது பிறந்தநாள் விழாவினையொட்டி சுற்றுலாத்துறை ...

Thottiyam 2017 05 21

தொட்டியத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

21.May 2017

தொட்டியத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 27-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது நிகழ்விற்கு தொட்டியம் நகர காங்கிரஸ் ...

Trichy 2017 05 19

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு

19.May 2017

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி, நாகமங்கலம், பாகனூர், ந.குட்டப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் ஒரு ...

Trichy 2017 05 16

திருச்சி மாவட்டத்தில் அதிகமான அரசு பேருந்துகள் இயங்குகின்றன : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

16.May 2017

திருச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்குகின்றன என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார். ...

Image Unavailable

திருச்சியில் மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம் ரத்து : மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தகவல்

15.May 2017

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலுhர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண். I.II,III, தரைமட்ட ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 27,755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன: கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தகவல்

14.May 2017

 திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 ...

Trichy 2017 05 13

திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்களை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன் ஆய்வு

13.May 2017

திருச்சிராப்பள்ளி தீரன் நகர் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டார போக்குவரத்து கழக ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 27,755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

10.May 2017

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 ...

Image Unavailable

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் மே 9 - 13ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாம்

7.May 2017

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் நாளை (மே 9-ம்) தேதி முதல் 13-ம் தேதிவரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்க ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் : கலெக்டர் டாக்டர். பழனிசாமி தகவல்

7.May 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.