முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயாளியின் மூளைப் பகுதியிலிருந்த கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள்: ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் மூளைப் பகுதியில் இருந்த கரப்பான் பூச்சியை ஸ்டான்லி அரசு மருத்துவமணை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

மூக்குவழியாக சென்ற பூச்சி

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வி. இவர் கடந்த  தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வலது மூக்கு துவாரம் வழியாக ஏதோ சென்றது போல் உணர்ந்தார். பின்னர் எரிச்சல் மற்றும் வலியால் அவதிப்பட்ட அவர், உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், காது மூக்கு தொண்டை பிரிவில் அனுமதிக்கபட்ட செல்வியை, மூக்கு உள்நோக்கு கருவி மூலம் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, மூளையின் அடிப்பகுதியில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று உயிருடன் இருப்பது தெரிந்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், மிக சாதுர்யமாக அந்த கரப்பான் பூச்சியை உயிருடன் அகற்றி சாதனை படைத்தனர்.

மருத்துவர்களுக்கு  நன்றி

தற்போது பூரண குணமடைந்துள்ள செல்வி  வீடு திரும்பினார். எவ்வித செலவும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்ப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்களுக்கு நெஞ்சம் நெகிழ செல்வி நன்றி தெரிவித்தார். இதேபோல், இந்த அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு விரிவான காப்பீட்டுத் திட்டம் பேருதவியாக இருந்ததால், அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago