முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

 கொழும்பு - இந்திய ஜனநாயகத்தின் 5-வது தூணாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவெடுத்துள்ளது. இதேபோல இலங்கையிலும் தகவல் அறியும் உரிமைச்  சட்டம் கொண்டு வரப்படும் என்று அதிபர் தேர்தலின்போது மைத்ரிபால சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார்.

அதிபர் பொறுப்பேற்பு:
அதிபர் பொறுப்பேற்ற 11 நாட்களில் தகவல் அறியும் உரிமைச்  சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவரது 100 நாட்கள் வேலை திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2015 ஜனவரியில் மைத்ரிபால சிறிசேனா அதிபராகப் பொறுப்பேற்றார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2016 மார்ச் 24-ம் தேதி அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 28-ம் தேதி மசோதா நிறைவேற்றப் பட்டது.

பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இலங்கையில்  தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இது குறித்து இலங்கை தகவல் அறியும் உரிமைச்  ஆணைய தலைவர் சங்கீதா குண ரத்ன கூறியபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கை அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. இனிமேல் மத்திய, மாகாண அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவை யான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்