முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா முதல்வராவதில் சட்ட சிக்கல் இல்லை: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி விளக்கம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருக்கிறார். சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

சட்டச்சிக்கல்  இல்லை :
இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாக ராவ் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகின.இதனை, முகுல் ரோத்தகி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னிடம் எவ்வித சட்ட ஆலோசனையும் பெறவில்லை. அதேவேளையில், சசிகலா முதல்வராக வேண்டும் என அவரது கட்சியினர் கூடி முடிவு எடுத்துள்ளனர். சசிகலா முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை" என்றார்.

வெங்கையா நாயுடு பேட்டி :
இந்தநிலையி்ல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர் தமிழக கவர்னர்  எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறார். அரசியல் சட்டப்படி உரியநடவடிக்கையை அவர் எடுப்பார். இதில் மத்திய அரசின்  பங்கு ஏதுமில்லை என்று கூறினார். பா.ஜ.க. பின்னனியில் உள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டை முதல்வர் பன்னீர்செல்வம் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago