முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீர்ர்கள் மீது கல்லெறிந்தால் நடவடிக்கை: ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தி அவர்கள் கடமையைச் செய்ய விடாது தடுத்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் விடுத்த எச்சரிக்கை ‘வருத்தமளிக்கிறது’ என்று அம்மாநில தேசிய மாநாட்டுக்கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜுனைத் அஸிம் மட்டூ கூறியபோது, “என்கவுண்டர் இடங்களுக்கு இளைஞர்கள் கும்பல் விரைந்து வருவது ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கையைக் கோருவதே தவிர ஈவு இரக்கமற்ற அச்சுறுத்தலையல்ல. அன்னியமாகிப் போயுள்ள காஷ்மீர் இளைஞர்களை இப்படி மிரட்டுவது வருத்தமளிக்கிறது.ஜனநாயக நாட்டில் அன்னியமாகிப் போயுள்ள காஷ்மீர் இளைஞர்களை அச்சுறுத்தல் மூலம் ஒத்துழைக்க வைக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

எச்சரிக்கையின் பின்னணி:
வடக்கு காஷ்மீர் பந்திப்பூரில் பாரே மொஹல்லா பகுதியில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்ள வந்த ராணுவ வீரர்கள் மீது இளைஞர்கள் கடுமையாக கல்லெறி தாக்குதல் நடத்தினர்.
கல்லெறி சம்பவத்தினால் விழிப்புற்ற தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை ஏ.கே ரகத் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி வீரர்கள் மீது தாக்குதல் நடத்த இதில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய நேரிட்டுள்ளது. சி.ஆர்.பி.எப் கமாண்டிங் ஆபீசர் உட்பட பலர் காயமடைந்தனர்.

 கல்எறிதல் கண்டனத்துக்குரியது :
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பலியாக முதற்காரணம் உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்களை கடமையைச் செய்ய விடாமல் கல்லெறி தாக்குதல் நடத்துவதனாலேயே, என்றும் ‘சில வேளைகளில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்கும் இவர்கள் உதவுகின்றனர். இளைஞர்கள் ராணுவ வீரர்களைத் தாக்குவது, தீவிரவாதிகளுக்கு உதவுவது, ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி தெருக்களில் கோஷமிடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் அவர்களை தேச விரோத சக்திகள் என்றே நாங்கள் கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் இன்று தப்பிவிடலாம் நாளை அவர்களை நாங்கள் பிடித்து விடுவோம், ஓய்வுஒழிச்சலற்ற ராணுவ நடவடிக்கைகள் தொடரும்” என்று ராணுவத் தலைமை பிபின் ராவத் எச்சரித்திருந்தார்.
இதைத்தான் தற்போது தேசிய மாநாடு, “வருத்த்துக்குரியது” என்று கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்