தென் கொரியாவில் ஊழல் வழக்கில் ‘சாம்சங்’ நிறுவன தலைவர் கைது

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
samsung(N)

சியோல்  - தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச வழக்கு
தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் ஜியுள்-ஹை ஊழல் வழக்கில் பதவி இழந்தார். அவருக்கு ரூ.250 கோடி லஞ்சம் கொடுத்ததாக சாம்சங் நிறுவன துணை தலைவர் ஜே லீ (48) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே அவரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

ரகசிய விசாரணை
அதை தொடர்ந்து கோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டின் கதவுகள் மூடப்பட்டு ரகசியமாக விசாரணை நடை பெற்றது. அரசு தரப்பின் வாதங்களை ஏற்ற கோர்ட்டு ஜேலீயை கைது செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெற ஏற்பாடு நடைபெறுகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்: