முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரியில் "அனோகாபெஸ்ட்-17" என்ற கருத்தரங்கம் நிர்வாகவியல் துறை மற்றும் கணிணி பயன்பாட்டுத் துறை சார்பாக நடைபெற்றது. இதன் துவக்க விழாவிற்கு பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் "கலைமாமணி" முனைவர் வி.முத்து தலைவர் புதுவைத் தழிழ்ச் சங்கம்; தலைமை வகித்தார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோபிநாத் வாழ்த்துறை வழங்கினார். நிர்வாகவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.பாலாஜி வரவேற்புரையாற்றினார். கணிணிபயன்பாட்டுத் துறைத் தலைவர் எஸ்.ஆனந்தி கருத்தரங்கின் நோக்கங்கள் பற்றி விளக்கினார். அண்ணா பல்கலைக் கழக காஞ்சிபுரம் உறுப்புக் கல்லூரி பேராசிரியர் மற்றும் தேர்வுத் துறை மண்டல அலுவலர் முனைவர் பி.லட்சுமிபதி; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற சரியான குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொள்ளுதல், அதை அடைவதற்கான திட்டங்களை வகுத்துக ;கொள்ளுதல் மற்றும் விடா முயற்சியுடன் அதை செயலாற்றுவதன் அவசியத்தைப் பற்றிவிளக்கிக் கூறினார். மாணவர்கள் எதிர்காலத்தில் தலைமைப ;பொறுப்பிற்கு வரும் பொழுது, கூட்டு முயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இக்கருத்தரங்கில் பல்லவன் பொறியியல் கல்லூரி பொருளாளர் சம்பந்தமூர்த்தி, கல்லூரி நிர்வாகிகள் டி.ஜி.பழனி, மீனாம்பாள்குப்புசாமி, மஞ்சுளாதேவி சிவசண்முகம், ஜானகி புருஷோத்தமன், டி.ஜி.எத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்