முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தினரை விமர்சித்து தீவிரவாதிகளை பாதுகாக்குறீர்களா? மனோகர் பாரிக்கர் பாய்ச்சல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ராணவு தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து தீவிரவாதிகளை பாதுகாக்குறீர்களா? மனோகர் பாரிக்கர் விமர்சித்துள்ளார்.

தொடரும் மோதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பொதுமக்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அப்படி மோதல்கள் வெடிக்கும் போது கல்லெறி தாக்குதல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவசும் நடவடிக்கையாக மாறிவிட்டது. காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தி அவர்கள் கடைமையைச் செய்ய விடாது தடுத்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். மேலும் சில கருத்துக்களை தெரிவித்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பு
ராணுவ தளபதியின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் கட்சி, ”அப்பாவி மக்கள் பாதிக்கும் வகையில் நடவடிக்கை இருக்க  கூடாது. அதேபோல், ராணுவ தளபதி ஒரு அரசியல்வாதி போல் இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று கூறி இருந்தது.  அதேபோல், ராணுவ தளபதி விடுத்த எச்சரிக்கை ‘வருத்தமளிக்கிறது’ என்று ஜம்மு-காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.

பாரிக்கர் பாய்ச்சல்
பிபின் ராவத் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து தீவிரவாதிகளை பாதுகாக்கும் வகையில் கருத்து தெரிவிக்கிறீர்களா என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரிக்கர், “எதிர் பக்கத்தில் எல்லோரும் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட நிலைமைகளில், ஒரு அதிகாரி தன்னுடைய தடைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது ராணுவத்தினர் பயன்படுத்திய பெல்லட் குண்டுகளால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்