பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு:

karai

 காரைக்குடி.-காரைக்குடி அருகேயுள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளிதலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மருத்தவ அலுலவர் கமலேஸ்வரன், சுகாதாரதுணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் வெ.யசோதாமணி பல்வேறுகாய்ச்சல் தொடர்பாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசுகையில் கைகளை நன்றாக கழுவுங்கள். அப்போதுதான் பன்றிகாய்ச்சல் நோய் வராமலும், பரவாமலும்  தடுக்க முடியும். ஏன் கைகளை நன்றாக கழுவவேண்டும்?. கைகள் வழியாகத்தான் நாம் அனைத்து விதமான செயல்களையும் செய்கிறோம். கைகள் வழியாகத்தான் நம் உடலில் நோய் தொற்று கிருமிகள் செல்கின்றன. கைகளைதான் நாம் அடிக்கடிவாய், மூக்கு,முகம்,தலை எனஅனைத்து இடங்களிலும் தொடுகிறோம். கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவினால் அனைத்து விதமான நோய்களிலும் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். அனைவரும் நன்றாக தண்ணீர்குடிக்க வேண்டும். தொண்டைவலி, காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்ளுங்கள். வீட்டிலேயே ஓய்வுஎடுங்கள். அரசுமருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாக கூடியமாத்திரைகள் தருவார்கள். உங்களுக்கு இருமல் வந்தால், உங்களின் அருகில் உள்ளவரிடம் இருந்து ஒருமீட்டர் தள்ளிநின்று இருமுங்கள். அப்போதுதான் அவரையும் நோயில் இருந்து காப்பாற்ற முடியும். நிலவேம்பு குடிநீர் அனைத்து விதமான காய்ச்சலுக்கும் நல்லமருந்து. பன்றிகாய்ச்சளுக்கு தடுப்பூசி நீண்டநாட்களுக்கு போட்டு பாதுகாக்கும்  வகையில் கிடையாது. ஏனெனில் இதன் வைரஸ் மாறிகொண்டே இருக்கும். வருமுன் காப்பதேசிறந்தது. எனவேநோய் வராமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். அதற்கு கை கழுவும்

8 முறைகளை பின்பற்றி கை கழுவுங்கள் என்று கூறி அந்த முறைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்றுகொடுத்தார். கருத்தரங்கில் ஜீவா, தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன்,ரஞ்சித்,பரமேஸ்வரி,ராகேஷ்,கிஷோர்குமார் உட்பட பலமாணவர்களும், பெற்றோர்களும் கேள்விகள் கேட்டுபதில்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பன்றிகாய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வுபெற்றனர். திருவேகம்பத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோதண்டராமன், சுகாதார ஆய்வாளர் முத்துவேல் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நுpறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ