முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு வறட்சி நிவராணம் கிடைக்க இந்திய தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: விவசாயிகள் நேரில் மனு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் அடியோடு பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. பெரும் சிரமத்திற்கும் கடன் சுமைக்கும் ஆளாகியுள்ள தமிழக விவசாயிகள் டெல்லி சென்று அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் முக்கிய பகுதியான சந்தர்மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த 21-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். இந்தநிலையில் சந்தர்மந்தர் பகுதியில் சுப்ரீம்கோர்ட்டிற்கு விவசாயிகள் நேற்று ஊர்வலமாக சென்றனர். பின்னர் தலைமை நீதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். முன்னதாக ஊர்வலத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசானது எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று முழக்கமிட்டுச் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்