தருமபுரி மாவட்டம் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்:கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில், நடந்தது

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தர்மபுரி
5

தருமபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில், நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சில வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் பன்றி காய்ச்சல் பற்றியும், காய்ச்சல் நோய் அதிகரிப்பு   பற்றியும் மற்றும் கொசுவினால் பரப்பப்படும் மலேரியா, டெங்கு, மற்றும் சிக்கன்குன்யா நோய்கள், தண்ணீரால் பரவக்கூடிய டைப்பாய்டு, காலரா போன்ற நோய்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள பேரல்கள், தொட்டிகள், பானைகள், பாத்திரங்கள், ஆகியவைகளில் கொசுக்கள் உற்பத்தியாகும். அத்தைகய இடங்களை மூடிவைக்கவும் வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்யவும் தண்ணீர் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடி வைக்கவும், தேவையற்ற, உபயோகமற்ற வீசி எறியப்பட்ட  உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கப், டயர்கள், தேங்காய் மூடிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டுமெனவும், கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், மேலும், டெங்கு நோய் தடுப்பு பணிக்காக டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் (ஆயணனழழசள) மாவட்ட கலெக்டர் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக 80 களப்பணியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத கிணறு (ரரௌநன றநடட) களில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் தேங்காமல் மற்றும் கொசுப்புழு வளராமல் இருக்க சுகாதார செயலாளருக்கு எடுத்துரைத்தனர். டெங்கு நோய் தடுப்பு பணியில் மாணவர்களும் தங்களது வீட்டில் கொசுப்புழு பெருகும் இடங்களை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கவும் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களும் குளோரினேசன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும்,  மேலும் நகராட்சி,; பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதிர் கொசுக்களை அழிக்கவும் அடிக்கடி  புகை மருந்து அடிக்கவும், மேலும், காய்ச்சல் கண்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டுமெனவும், போலி மருத்துவர்களை அணுக வேண்டாம் எனவும், போலி மருத்துவர்கள் யவரேனும் தங்கள் பகுதிகளில் இருந்தால் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ்அப் எண். 8903891077 மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில்    மாவட்ட திட்ட மேலாளர் சுகாதாரப்பணிகள்) மரு. ராஜ்குமார், உதவி திட்ட மேலாளர் (சுகாதாரப்பணிகள்) மரு. பாலவெங்கடேசன், கொள்ளைநோய் தடுப்பு மருத்துவர் (சுகாதார பணிகள்) மரு. விவேக், மருத்துவ அலுவலர் (பென்னாகரம்) மரு. கனிமொழி, மாவட்ட மலேரியா நோய் தடுப்பு அலுவலர்  சிவராஜ், சித்த மருத்துவ அலுவலர் மரு. சரவணன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வைளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட விரிவாக்க கல்வியாளர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: