முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் உடற்தகுதி பெறுவது கடினம்: லோகேஷ் ராகுல் தகவல்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம் என தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

காயத்தால் அவதி
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக லோகேஷ் ராகுல் வளர்ந்து வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 6 அரைசதங்கள் அடித்து அசத்தினார். இந்த தொடரில் விளையாடும்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை
இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லோகேஷ் ராகுல் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.

மூன்று மாதங்கள் ...
இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘‘தொடருக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்ப அது மாறுபடும். இதனால் உடல்நிலை எப்படி தேறுகிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. தற்போது இரண்டு மூன்று வாரங்களாக ஓய்வு எடுத்து வருகிறேன். எந்த வேலையும் செய்யவில்லை. அதன்பிறகு பிசியோதெரபி மற்றும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதற்கான வேலையை தொடங்குவேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்